Movie prime

தமிழக அரசு உத்தரவு!! மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுத வேண்டும்!!

 
students
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் பெயரின் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும். மாணவர்கள் கையொப்பம் இடும் அனைத்து சூழல்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் தான் கையொப்பமிட வேண்டும்.

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட அரசனை ஒன்றில், முதலமைச்சர் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைத்து  அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பமிட வேண்டும் என்பர் அறிவிக்கப்பட்டிருந்தது.
government employees
தற்போது, மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பாக அமையும் என்று கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
tamil
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையொப்பம் இடும் சூழ்நிலைகளில் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை, பள்ளிக்கல்வி ஆணையர் சார்பில் அனைத்து  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.