Movie prime

நடிகர் சிவாஜியின் மகள்கள் தொடுத்த வழக்கு!! உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறு!!

 
shivaji
தமிழ் திரை உலகின் மிக மிக பிரபலமான நடிகர் சிவாஜி கணேசன். இவர் தமிழ் திரை உலகில் நீங்கா இடம் பிடித்து, நடிகர் திலகம் என்ற பட்டம் பெற்ற மாபெரும் நடிகர். அவருக்கு ராம்குமார், பிரபு என்ற 2 மகன்களும் சாந்தி, தேன்மொழி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
chennai high court
கடந்த வாரம் சிவாஜியின் மகள்கள் சொத்து பிரிக்கப்பட்டது, மற்றும் சிவாஜியின் உயில் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சொத்து விவகாரத்தில் சகோதரர்கள் ஏமாற்றியதாக சிவாஜியின் மகள்கள் கூறியிருந்தனர். மேலும், அந்த வழக்கில் சிவாஜியின் உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

நடிகர்கள் ராம்குமார், பிரபு சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது. நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று அவர்கள் சார்பாக வாதம் நடைபெற்றது.