தொடர் கனமழையால் உச்சம் தொட்ட மல்லிகை பூக்களின் விலை!!
Sep 4, 2022, 07:53 IST

மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மல்லிகைப் பூக்களின் விலை திடீரென அதிகரித்து, நேற்று ஒரு கிலோ ₹2300 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஆடி மாதத்தில் மல்லிகை பூ செடிகள் அனைத்தும் அதிகளவில் பூத்தன.

வரத்து அதிகரித்ததால் மல்லிகை விலை குறைந்து ஒரு கிலோ ₹200 வரை குறைந்து விற்கப்பட்டது. ஆவணி மாதத்தில் பூ வரத்து குறைந்து உள்ளதால் விலை ஆயிரத்தை தாண்டியது. மேலும், 3 நாட்களாக ஒரு கிலோ மல்லிகை பூக்கள் ₹1500 வரை சென்றது.
மேலும், தரம் வாரியாக பிரிக்கப்பட்ட மல்லிகைப் பூக்கள் ₹500 முதல் ₹1800 வரை விற்கப்பட்டது. சென்ட் தொழிற்சாலைகளில் பல ஆண்டு காலமாக கிலோ ₹70க்கு மேல் வாங்கியது கிடையாது. தற்போது சென்ட் தொழிற்சாலைகளில் கூட கிலோவுக்கு ₹250 விலை நிர்ணயித்ததால் மல்லிகை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்றும் பூவின் வரத்து குறைந்த நிலையில் மல்லிகை கிலோ ₹2300 வரை அதிகரித்து விற்பனையானது. முகூர்த்த தினமாக இல்லாத நிலையிலும் நேற்று விலை உச்சத்தை தொட்டதால் சில்லறை விற்பனையாளர்கள் மல்லிகையை வாங்காமல் தவிர்த்தனர்.