Movie prime

தமிழகத்தில் இன்று குடும்ப அட்டை குறை தீர் முகாம்!!

 
ration card

இன்று ரேஷன் கார்டுகளை புதிதாக விண்ணப்பிக்க, விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள், ரேஷன் அட்டைகளில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள், பெயர் திருத்தம், விலாசம் மாற்றம், மற்றும் வேறு திருத்தங்கள் செய்ய விண்ணப்பித்தவர்கள் என்று ரேஷன் நுகர்வோரின் குறை தீர்க்கும் முகாம் நடைப்பெறுகிறது. 

kuraitheer mugam

தமிழகத்தில் தற்போது மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நுகர்வோர்களின் வசதிக்காக மாதம் தோறும் பகுதி வாரியாக குறைத் தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் உள்ள குறைகளை ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம்களில் பங்கேற்று தீர்த்துக் கொள்ளலாம். இந்த குறை தீர் முகாம்கள் மாதம் தோறும் நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.

ration_shop

அதன்படி சென்னையில் இன்று நவம்பர் 12 ஆம் தேதி, சனிக்கிழமை இந்த மாதத்துக்கான பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் பகல் 1 மணி வரை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.