Movie prime

இன்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகத்திற்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

 
School leave
இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த மாவட்டத்தில், உள்ள புகழ் பெற்ற ஆலயத்தில் கடைமுக தீர்த்தவாரி நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியநாத சுவாமி ஆலயம் என்ற புகழ் பெற்ற ஆலயம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் இந்த ஆலயத்தில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றது. பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த ஐப்பசி துலா உற்சவத்தில் கலந்து கொள்ள திரண்டு வருவார்கள்.
thula snanam
பக்தர்கள் பாவங்களைக் கழுவி புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச் சுமைகளின் காரணமாக கங்கை நதி உள்ளிட்ட அனைத்து நதிகளும் கருமை நிறம் அடைந்தன. இதன் காரணமாக, அனைத்து ஜீவ நதிகளும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் வந்து புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவத்தில் சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி துலா உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான திருக்கல்யாணம் தேரோட்டம் நேற்று (15 ஆம் தேதி) நடைபெற்ற நிலையில், கடைமுக தீர்த்தவாரி இன்று நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.
leave
பல்வேறு சிவாலயங்களிலும் இது போல் உற்சவங்கள் தொடங்கியுள்ள நிலையில் இன்று 16 ஆம் தேதி கடைமுக தீர்த்தவாரி நடைபெறுவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார்.