Movie prime

இன்று 26 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
leave

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கி அதன் பின்னர், அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இடையில் சில நாட்கள் மழை குறைந்த இருந்தது.

cyclone

இந்நிலையில்,  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் நேற்று மாலை மாண்டஸ் புயலாக மாறி உள்ளது. அதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில், இன்று மாலைக்கு பிறகு இந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, தமிழகம் மட்டும் புதுவையில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன் காரணமாக, நேற்று முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

School leave

மேலும், தேனீ மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை வட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.