இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
Nov 3, 2022, 07:01 IST

தற்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சையில் மாமன்னன் ராஜாராஜா சோழனின் சதய விழா நடைபெறுவதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.