Movie prime

இன்றே கடைசி!! மாணவிகள் மாதம் ₹1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

 
girls
தமிழகத்தில் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதி செய்ய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் செயல்பட்டு வந்த  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டமாக  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
students
இது குறித்த முழுமையான தகவல்களை சட்டசபையில்  பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ₹1000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்த உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் உறுதிபட அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து தமிழகத்தில் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.
college
அந்த அறிக்கையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கி கணக்கு  இவைகளை மாணவியரிடம் இருந்து பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.  கல்லூரி மாணவிகளுக்கு ₹1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக உயர்கல்வித்துறை செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10 ஆம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு, இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், இன்றே மாதம் ₹1000 பெற விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.