Movie prime

இன்றே கடைசி!! ஆதார் பான் கார்டு இணைக்க இன்றே கடைசி, தவிரனால் ₹1000 அபராதம்!!

 
pan
ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஜூன் 30, 2022 க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை  இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின்படி ₹500 அபராதம் செலுத்த வேண்டும். ஜூலை 1 ஆம் தேதிக்கு மேல், அபராதத் தொகை ₹1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
adhaar
மத்திய அரசு, வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என முன்னரே, தெரிவித்துள்ளது. இதற்கு பல முறை விதிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால், இன்று இணைக்க தவறுபவர்கள், ஜூலை மாதம் முதல் ₹1000 வரை அபராதம் செலுத்த நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
pan
வங்கி கணக்கு திறக்க, குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, ரொக்க பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது, பங்கு பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம். இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று CBDT ஏற்கனவே கூறியிருந்தது.