Movie prime

நாளை உள்ளூர் விடுமுறை!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு!!

 
leave
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு, நாளை தர்மபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  நாளை ஆகஸ்ட் 3 ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்ற உள்ளது. இதை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
aadiperuku
இந்த அறிவிப்பை தருமபுரி மாவட்டத்தின் ஆட்சியர், திருமதி சாந்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி (புதன்கிழமை) அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது.
School leave
நெகோஷியபில் இன்ஸ்ட்ரூமென்ட் சட்டம் 1881 ன் படி விடுமுறை அறிவிக்கப்படாததால், அன்றைய தினம் மாவட்ட கருவூலம் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயல்படும். அதற்கு பதிலாக வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி வேலை நாளாக மாற்றப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி அறிவித்துள்ளார்.