Movie prime

சோகம்!! இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பரிதாப பலி!!

 
suicide

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் உள்ள இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பரிதமாக பலியாகி உள்ளார். சமீப காலமாக எதிர்பாராத விபத்துகளில் சிறுவர்கள் பலியாகும் நிகழ்வு அடிக்கடி நடந்து மக்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் சோகத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

iron gate

எங்கு? எப்போது? எவ்வாறு? விபத்துகள் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிவதில்லை. அனைத்து இடங்களிலும் பெற்றோர்களும், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போன்ற சம்பவம் சென்னையில் நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஹரிணி என்ற 5 வயது சிறுமியின் தந்தை அந்த கடையின் இரும்பு கதவு ஒன்றை மூட முயற்சி செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த இரும்பு கேட் சிறுமி ஹரிணி மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

hospital

இதில் பலத்த காயம் அடைந்து சிறுமியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.