Movie prime

சோகம்!! நடுக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்!! 8 பேர் மரணம்!!

 
sinking boat
ஹாங்ஹாங் சேர்ந்த The Jin Tian என்ற சரக்கு கப்பல் எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் தத்தளித்தது. அந்தக் கப்பல் நேற்று (ஜனவரி 26 ) ஜப்பானிடம் உதவி நாடி அழைப்பு விடுத்தது. அப்போது அது டாஞ்சோ தீவுகளிலிருந்து (Danjo Islands) சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.
fishing boat
உடனடியாக ஜப்பானின் ராணுவ படை, கடல் காவல் படை ஆகியவற்றின் விமானம், தென்கொரிய கடல் காவல் படை கப்பல்களும் தனியார் கப்பல்களும் தேடல் மீட்பு பணியில் ஈடுபட்டன. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சரக்கு கப்பல் நின்ற இடம் கண்டறியப்பட்டது. எனினும் அந்த கப்பல் மூழ்கி கொண்டிருந்தது.

உடனடியாக விரைந்து சென்று மீட்பு குழுவினர் அதில் இருந்து 13 பணியாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் 8 பேர்  8 பேர் உயிரிழந்தனர், இதில் 6 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என ஜப்பானின் ஃபுக்குவொக்கா நகரில் உள்ள சீனப் பேராளர் லு குவிச்சுன் (Lu Gu Jun) தெரிவித்துள்ளார். மீட்பு துறையினர் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டு வருகின்றனர்.
sinking boat
இந்த கப்பல் சீனா மற்றும் மியான்மரில் இருந்து 22 பணியாளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது  ஜப்பான் கடல் பகுதியில் மூழ்கியது தெரியவந்தது.  கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. அப்போது பலத்த காற்று வீசியதாக கடலோர காவல்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கடலோர காவல்படை உடனடியாக நாகசாகிக்கு மேற்கே உள்ள ரோந்து படகுகள் மற்றும் விமானங்களின் உதவியை நாடியதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹிரோகாசு மாட்சுனோ கூறினார்.