சோகம்!! கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து!! 3 பேர் பலி!!
Jan 23, 2023, 09:45 IST

கோவில் திருவிழாவின் போது கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகில் உள்ள கீழ்வீதி பகுதியில் உள்ள மண்டி அம்மன் கோயில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அந்த வகையில், பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பக்தர்கள் வந்த கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், அந்தரத்தில் தொங்கியபடி வந்த பிளஸ்-2 மாணவர் ஜோதி பாபு கீழே விழுந்து உயிரிழந்தார்.
மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்து (42 ), கீழ்ஆவதம் பகுதியை சேர்ந்த பூபாலன் ஆகியோரும் உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்து நெமிலி அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி காவல்துறையினர் கிரேன் ஆபரேட்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உடனடியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, கிரேன் விழுந்து விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்த சம்பவம் சாலை சரியில்லாத காரணத்தால் நடந்துள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும். இது போன்ற விழாக்களுக்கு மருத்துவர் ஆம்புலன்ஸ் போன்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.