துர்கா சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது நடந்த சோகம்!! 40 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரியில் நடைபெற்ற தசரா விழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அங்கு நேற்று நடைபெற்ற, துர்கா சிலை கரைக்கும் நிகழ்வின் போது பெரும் விபத்து நடந்துள்ளது.
நீரில் சிலைகளை கரைக்கும் போது, மால் ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் பக்தர்கள் 40 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே, மீட்புப் பணிகள் தொடங்கியது.
மேலும், சிலை கரைக்க வந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதுவரை 8 பேரின் உயிரிழந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தசரா விழாவில் சிலை கரைப்பு சடங்கின் போது ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் அதில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.