உஷார் !! புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

இந்தியாவின் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் மகாராஷ்டிரா, கேரளா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு போன்ற குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தி வந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகளும் தீர்க்க உள்ளன. இதனால், கர்நாடக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வணிக வளாகங்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள், பள்ளி-கல்லூரி உட்பட கல்வி நிலையங்கள், விடுதிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் அங்கு செல்லும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வாகனங்கள், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துக்களில் பயணிக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
மேலும், சளி-காய்ச்சல் பாதிப்புகள் உடையவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் தாமாகவே வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுப்பாடுகளை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.