Movie prime

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை!! வரும் 24 ஆம் தேதி வரை!!

 
sorimuthu iyyanar temple.jpg
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்.
papanasam
பாபநாசம் வன சோதனை சாவடியில் இருந்து காரையாறு அணை வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள சாலை சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கி உள்ளது.

முன்னர், இந்த சாலை பணிகள் நேற்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல நேற்று வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சாலை பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
agasthiyar falls
அதாவது வருகிற 24 ஆம் தேதி வரை அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடையை நீட்டித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.