Movie prime

எச்சரிக்கை!! தமிழகம் முழுவதும் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்!! மீறினால் அபராதம்!!

 
child with mask
மீண்டும் இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. முன்னரே, ஜூன் மாதம் கடைசி வாரத்தில்  4 ஆம் அலை பரவலாம் என்று ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் எச்சரிக்கையை போலவே, இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
corona new
இதனை தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,466 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 7,458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குறிப்பாக, சென்னையில் மட்டும் 624 பேருக்கு  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த குறிப்பில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம். மேலும், கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக  சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மேலும் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் சமூக இடைவெளி,  முக கவசம் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கவனக்குறைவாக கடைபிடிக்காமல் இருப்பதால் மட்டுமே கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
corona test
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சரியான வகையில் முகக்கவசம், சமூக இடைவெளி என அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தவறாமல் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மட்டுமே நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்களிடமும் மீது  அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.