Movie prime

ஒரு கிலோ அரிசி ₹350!! அத்தியாவசிய பொருட்களுக்கு அடித்துகொள்ளும் மக்கள்!!

 
inflation
இயற்கை சீற்றம், வேலையில்லா திண்டாட்டம், உணவு தட்டுப்பாடு போன்ற பல பிரச்னைகளால் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் தினசரி வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.
econonic crisis
பாகிஸ்தானில் ஒரு கிலோ அரிசி ₹350 யாக அதிகரித்துள்ளது. ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களின் விலையும் கிலோவுக்கு ₹400 யாக அதிகரித்துள்ளது. மேலும், இறைச்சி வகைகளின் விலையோ விண்ணை முட்டுகிறது. பாகிஸ்தான் மக்களின் பிரதான உணவான, கோதுமைக்கு கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு மானிய விலையில் பொது மக்களுக்கு கோதுமை மாவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

கோதுமை மாவு வழங்க அரசு அமைத்துள்ள மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்ட நெரிசலால் அண்மையில் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டுள்ளது. கோதுமை மாவு வழங்கும் மையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கடுமையாக தாக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
inflation
மேலும், பெட்ரோல், எரிவாயு போன்ற பொருட்களின் இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக கடன்களை வாங்கி நாட்டின் நிதி நிலையை சரி செய்ததால் கடன் அளவும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ராணுவத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராணுவ வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 2 வேளை உணவு கூட சரியான முறையில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. உலக வங்கி பாகிஸ்தான் உடனடியாக செயல்படாவிட்டால் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று கடந்த வாரம் எச்சரித்திருந்தது.