வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!! அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதற்கு ஒட்டி உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை நகரத்தின் சில பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.