Movie prime

400 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய சூரிய கிரகணம்!!

 
solar eclipse
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் முழு கிரகணம், பகுதி கிரகணம், வளைய கிரகணம், வளைய மற்றும் முழு கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என்று நான்கு வகையாக நிகழ்ந்து வருகின்றன.
eclipse
அந்த வகையில், இன்று 400 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் அரிதான கலப்பின சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தை ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் பார்க்கலாம். இந்திய நேரத்தின்படி, காலை 7.04 மணிக்கு தொடங்கியுள்ள இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.
solar eclipse
இந்த சூரிய கிரகணத்தை ஆஸ்திரேலியாவின் நிங்கலூ பகுதியில் முழுமையாக பார்க்க முடியும். அதனால், இந்த சூரிய கிரகணத்திற்கு நிங்கலூ சூரிய கிரகணம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை நாசா, தனது யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்புகிறது.