Movie prime

பாகிஸ்தானை உலுக்கிய அடுத்தடுத்த தற்கொலைப்படை தாக்குதல்!! பலி 58 ஆக உயர்வு!!

 
blasting
பாகிஸ்தான் நாட்டில் மசூதிக்கு வெளியே நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மஸ்துங் நகரில்  மிலாது நபி பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் பள்ளிவாசல் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத நேரத்தில் வாசலில் காவல்துறை வாகனத்தின் அருகே நின்றிருந்த தற்கொலை படையைச் சேர்ந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
pakistan
இந்த சம்பவத்தில் நேற்று 54 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. மேலும், இதேபோல் ஹங்கு மாவட்டத்திலும் பயங்கரவாதிகள் மசூதிக்குள் புகுந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
pakistan mosque
மேலும், இந்த சம்பவத்தில் மசூதியின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த 2 தற்கொலைப்படை தாக்குதல்களிலும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.