பள்ளிக்கு சென்ற மாணவன் வலிப்பு ஏற்பட்டு மரணம்!!
Jun 28, 2023, 08:46 IST

பள்ளியில் மாடிப்படிகளில் ஏறி சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சிறுவன் மரணமடைந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஏழுகிணறு, நையனியப்பன் தெருவில் கேசவன் என்ற 52 வயது ஜவுளி வியாபாரி வசித்து வருகிறார்.

இவருக்கு கங்காதரன் என்ற 10 ஆம் வகுப்பு பைக்கும் மகன் உள்ளார். அவர் செயின்ட் கேப்ரியல் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற கங்காதரன் பள்ளியின் படிகளில் ஏறி மாடிக்கு சென்று கொண்டிருந்தபோது, திடிரென்று வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவனை மீது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார். இது குறித்து முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.