Movie prime

ஆடிப்பூரம்!! இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
School leave
தமிழகம் முழுவதும் இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரம் விழா நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்றைய தினம் ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின்  பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
melmaruvathur
அதனால் பொதுமக்களின் வசதிக்காக இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்த மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
srivilliputhur
தொடர்ந்து, நாளை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற உள்ளது. அதனால், நாளை ஜூலை 22 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.