Movie prime

அதிரடி அறிவிப்பு!! இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
School leave
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில் கேரளாவில் நிலவி வரும், தென்மேற்கு பருவமழையால் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
rain
அந்த வகையில் கேரளாவில் எல்லைப் பகுதிகளான கோவை, கன்னியாகுமரி, நீலகிரி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
rain leave
இதனால் சாலைகளில் மழைநீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் அடிப்படையில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.