Movie prime

கோவை ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த நடிகர் கமல்ஹாசன்!!

 
kamalhasan car gift
சர்ச்சைகளில் சிக்கி வலம் வந்து கொண்டிருக்கும் கோவையை சேர்ந்த ஷர்மிளாவுக்கு புதிய காரை பரிசாக அளித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக கோவை காந்திபுரம் - சோமனூர் செல்லும் வி.வி. என்ற தனியார் பேருந்தில் பணிபுரிந்து வந்தார்.
mp kanimozhi sharmila visit
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்த ஷர்மிளாவை சந்திக்க கடந்த வெள்ளிக்கிழமை தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். கனிமொழி காந்திபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது அந்த பேருந்தின் பெண் பயிற்சி நடத்துனர் கனிமொழியுடன் பேருந்தில் ஏறியவர்களிடம் பயணத்திற்கான டிக்கெட் கட்டணத்தை கேட்டுள்ளார்.

எம்.பி கனிமொழி சிரித்த முகத்துடன் தனது பி ஏ மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் ஹோப்ஸ் சாலை அருகே இறங்கி விட்டார். அவர் இறங்கிய பின்னர் ஷர்மிளாவும் பேருந்தில் இருந்து இறங்கி விட்டார். பேருந்தில் ஏறி என்னை சந்திக்க வந்த கனிமொழி எம்.பியிடம் ஏன் டிக்கெட் கேட்டீர்கள் என்று ஷர்மிளா அந்த பெண் பயிற்சி நடத்துநரிடம் கேட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
kamal sharmila visit
அதன் பின்னர், ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர், எம்.பி கனிமொழி ஏற்பாடு செய்த இடத்தில் ஷர்மிளா பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவருக்கு புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார்