Movie prime

நடிகர் ரஜினிகாந்த் சமூக சேவகருக்கு ஆம்புலன்ஸ் அன்பளிப்பு!!

 
rajini manimaran
திருவண்ணாமலையை சேர்ந்த மணிமாறன் என்ற சமூக சேவகருக்கு நடிகர் ரஜினிகாந்த் ₹8 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸை அன்பளிப்பாக அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன் என்பவர் தனது 16 வயதில் இருந்தே சமூக சேவகராக இருந்து வந்துள்ளார்.
mani maran
ஆதரவற்ற முதியவர்கள், பெண்கள் போன்ற அனைத்து தரப்பு ஆதரவற்றவர்கள் மரணமடைந்தால் அவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறையில் கேட்பாரற்று கிடைக்கும். இந்நிலையில் அந்த வகையிலான ஆதரவற்ற உடல்களை காவல்துறையினர் அனுமதியுடன் நல்லடக்கம் செய்து வருகிறார் மணிமாறன்.

இந்த பணியை கடந்த 21 ஆண்டுகளாக இவர் மேற்கொண்டு வருகிறார். மேலும், இவர் இதுவரை 2,045 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். இவரது செயலை பாராட்டும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன. இந்நிலையில், இவர் தொழு நோயாளிகளுக்கும் மனமுவந்து சேவை செய்து வந்துள்ளார்.
rajini manimaran
இவரது சேவையை பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த் இவரை மனதார பாராட்டி இவரது சேவையை தொடர்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், தனது அறக்கட்டளை வழியாக இவருக்கு ஒரு ஆம்புலன்சை அன்பளிப்பாக அளித்துள்ளார்.