நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!! தேவையின்றி வெளியே செல்லாதிங்க!!
May 3, 2023, 09:00 IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை மே 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை நீடிக்கும் என்றும், மே 8 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இருந்த போதும், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சுற்றுசூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப மார்ச் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்தது. கோடை வெப்பம் இந்த ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில், நாளை அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. நாளை கத்திரி வெயில் தொடங்கி தொடர்ந்து 25 நாட்கள் அதாவது மே 28 ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த 25 நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனிப்பட்ட தகவல் எதையும் வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை என்ற போதிலும் கத்திரி வெயில் காலங்களில் மேலும் வெயில் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் இப்போதே சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்த அக்னி நட்சத்திர காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.