Movie prime

அலெர்ட்!! மாணவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை!!

 
bus foot board
மாணவர்கள் பேருந்துகளில் படியில் தொங்கியபடி அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தால் நடத்துனர்கள் பேருந்தை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
free bus
தமிழ்நாட்டில் சமீபகாலமாக பேருந்தில் இருந்து மாணவர்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கி பலியாகும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதனால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சோகத்திற்கு ஆளாகி வந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் இருப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்கள் பேருந்துகளில் படியில் தொங்கியபடி பயணம் செய்வது, உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
bus foot board
அதை மீறி மாணவர்கள் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வது அல்லது ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களால் நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றால் காவல் நிலையம் அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.