Movie prime

இன்றும், நாளையும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை!!

 
leave
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கோழிக்கோட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது.
fever
அதனால் மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், டெங்கு போன்ற நோய்களின் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நிபா வைரஸால் கோழிக்கோட்டில் இதுவரை 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை எல்லை பகுதிகளில் வாகனங்கள் முழு சோதனைக்கு பிறகே நுழைய அனுமதிக்கப்படுகின்றன. கேரளாவில் இதுவரை 2 பேர் நிபா வைரஸ் பாதிப்புக் காரணமாக உயிரிழந்துள்ளனர். தமிழக சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
child with mask
தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவலை அடுத்து, புதுச்சேரி மாகேயில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்றும் நாளையும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.