கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!
Oct 4, 2023, 09:09 IST

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில் கேரளாவில் நிலவி வரும், தென்மேற்கு பருவமழையால் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் கேரளாவில் எல்லைப் பகுதிகளான கோவை, கன்னியாகுமரி, நீலகிரி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மேலும், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.