6 - 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 18 முழு ஆண்டு தேர்வு!!
Apr 10, 2023, 12:42 IST

சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும், அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2022- 23 ஆம் கல்வியாண்டிற்கான 1- 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு நடந்துவது தொடர்பாக சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21 ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் 4 முதல் 9 -ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.