Movie prime

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!!

 
traffic
கலைஞர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இன்று காலை 8 மணியளவில் அண்ணா சாலை கலைஞர் கருணாநிதி சிலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி சமாதி வரை அமைதி ஊர்வலம் செல்கின்றனர். அதன் காரணமாக, சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றும் செய்யப்பட்டுள்ளது.
kalaignar
அந்த வகையில், போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பாரதி சாலை வழியாக திருப்பி அனுப்படுகிறது.
m.k.stalin peace march
அமைதி ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் போது வாகனங்கள் அண்ணா சிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி அனுப்படும். அதனால் காலை நேரத்தில் அண்ணா சாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.