Movie prime

உஷார் மாணவர்களே!! இனி வருகை பதிவு குறைந்தால் ₹1000 அபராதம்!! பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு!!

 
college
அனைத்து பல்கலைக்கழகங்களும் மாணவர்களின் நலனை கருதி அவ்வப்போது புதுப்புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் வருகைப்பதிவு விவகாரத்தில் கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாணவர்களின் வருகைப்பதிவு குறிப்பிட்டுள்ள சதவீதத்தை விட குறைந்தால் ₹1000 அபராதம் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
students
பி.எட் பட்டப்படிப்பில் முதல் பருவம் மற்றும் எம்.எட் பட்டப்படிப்பில் 1,3 ஆவது பருவம் ஆகிய பருவத்தில் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக 100 நாட்கள் வருகை புரிய வேண்டும். மேலும், பி.எஸ்சி, பி.எட்; பி.ஏ பி.எட் ஆகிய பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்கள் 125 நாட்கள் வருகை புரிய வேண்டும்.

அப்படி முறையான நாட்கள் கல்லூரிக்கு வருகை புரியாத மாணவர்களின் பட்டியலை வரும் 6 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ tnteuattendance@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
mask college
மேலும், அனைத்து மாணவர்களும் 85 விழுக்காடு வருகை புரிய வேண்டும். அவ்வாறு வருகை புரியாமல் 75 விழுக்காடு முதல் 84 விழுக்காடு வரையில், வருகைப்பதிவு உள்ள மாணவர்களை அதற்கான உரிய மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கலாம். மேலும் வருகைப் பதிவு குறைந்ததற்காக ₹1000 அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும், என்றும் கூறப்பட்டுள்ளது.