Movie prime

மாணவர்கள் கவனத்திற்கு!! இன்று முதல் மருத்துவ படிப்புகளில் சேர்வதர்க்கு விண்ணப்பிக்கலாம்!!

 
neet
மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் இன்று முதல் வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் நாட்டில் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் www.tnhealth.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
neet
இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி மருத்துவ படிப்பிற்கான நீடு நுழைவு தேர்வு 499 நகரங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 20லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் எழுதி உள்ளனர். மேலும், தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தேர்வு முகமை பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதித்தனர்.
neet
இந்நிலையில், கடந்த ஜூன் 13 ஆம் தேதி நீட் தேர்வின் முடிவுகள் வெளியானது. தமிழ்நாட்டில் இருந்து 1,44,516 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் வரும் ஜூலை 10 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.