Movie prime

மாணவர்கள் கவனத்திற்கு!! இன்று முதல் பகுதி நேர பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!!

 
students
வரும் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இன்று முதல் ஜூலை 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டே பொறியியல் படிப்பு படிப்பதற்கு வசதியாக பகுதி நேர பொறியியல் கல்லூரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
students
அந்த வகையில், தமிழ்நாட்டில் 6 அரசு கல்லூரிகளும், 2 அரசு உதவி பெரும் பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளிலும் மற்ற பொறியியல் படிப்புகளை போலவே நான்கு ஆண்டுகள் பகுதி நேரமாக படிக்க வேண்டும். இதற்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
students
இந்த பகுதி நேர பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் வரும் ஜூலை மாதம் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக www.ptbe-tnea.com என்ற அதிகாரபூர்வமான இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.