Movie prime

தேர்வர்கள் கவனத்திற்கு!! இன்றே கடைசி!! டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு!!

 
tnpsc
டிஎன்பிஎஸ்சியில் ஆராய்ச்சி உதவியாளர் பணிகளுக்கான வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
tnpsc exams
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு துணைப் பணிகளில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பு 2023ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படி, ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள் மற்றும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நேர்காணல் அல்லாத பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ₹36, 200 முதல் ₹1,33,100 வரையிலான ஊதியத்தைப் பெறுவார்கள். நேர்காணல் பதவிக்கான தேர்வு ₹36,900 முதல் ₹1,16,600 வரை மாதச் சம்பளத்தை பெறுவார்கள். மேற்கண்ட பதவியில் 6 காலி பணியிடங்கள் உள்ளன.
exams
விண்ணப்பதாரர்களின் எழுத்து மற்றும் வாய்மொழி தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், இட ஒதுக்கீடு நியமன விதிக்கு உட்பட்டு, வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். ஆர்வம் உள்ள தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இன்று ஜூலை 25 ஆம் தேதி விண்ணப்பங்களை பதிவு செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விவரங்களை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.