தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விழிப்புணர்வு பேரணி!!

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது வழக்கம். தற்போது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. அதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 'மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்' நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி, இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாளான ஏப்ரல் 28 ஆம் தேதி வரை இந்த 'மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்' நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. மேலும், இன்று முதல் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் தொடங்க உள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.