Movie prime

உஷார்!! தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்!!

 
corona test
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. தொற்று அறிகுறி உள்ளவர்களிடம் பரிசோதனையை மேற்கொள்வது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
corona new
அந்த வகையில், தமிழ்நாட்டில் 3,000 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் வெளிநாட்டில் இருந்த வந்த இருவர் உட்பட மொத்தம் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது, 79 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 660 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
vaccination
சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெரம்பூர், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகவில்லை. இது தவிர உள்ள 35 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.