Movie prime

பெரும் அதிர்ச்சி!! ராணுவ தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 100 பேர் பலி!!

 
flight atack
மியான்மர் நாட்டில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்துவதை அதிகரித்து வருகின்றனர்.
air strike
அந்த வகையில், நேற்று மியான்மர் நாட்டில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள், உள்ளூர் ஜனநாயக சார்பு குழு மற்றும் சுயாதீன ஊடக உறுப்பினர்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
myanmar
இந்நிலையில், இந்த பேரணியை நிறுத்தும் வகையில், மியான்மர் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டனர். இந்த வான்வழி தாக்குதலில் பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 100 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.