Movie prime

பெரும் அதிர்ச்சி!! கோவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலி!!

 
vaccination
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
corona new
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
corona test
அதனால், கோவை அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 3 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதனால் கோவை சுகாதார கண்காணிப்பு மற்றும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.