Movie prime

பெரும் அதிர்ச்சி!! பிரியாணியில் பூரான்!! மருத்துவமனையில் 3 குழந்தைகள்!!

 
briyani
கடந்த சில காலமாக உணவகங்களில் வாங்கப்படும் உணவில் சில சமயம் எலி, கரப்பான் பூச்சி இருந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, நேற்று பூரான் இருந்த பிரியாணியை சாப்பிட்டு 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
pooran briyani
கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள ரட்சகர் நகரில் ராஜா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள் மற்றும் 4 வயதில் ஒரு மகன் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராஜா வீட்டில் இருந்த நிலையில், குழந்தைகள் மூவரும் தந்தையிடம் பிரியாணி வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதனால் ராஜா தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார்.

உணவகத்தில் 2 சிக்கன் பிரியாணி வாங்கி குழந்தைகளுக்கு ஊட்டிய போது, பிரியாணியில் பூரான் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது, குழந்தை அஜய் கிருஷ்ணா பாதி பூரானை விழுங்கி மீதியை துப்பி உள்ளார். இதனால், மிகவும் அதிர்ச்சி அடைந்த ராஜா பிரியாணியுடன் குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனையில் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
hospital
குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் குழந்தைகளின் உடல் நிலையில் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அப்பகுதி காவல்துறையினர் உணவகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணியில் பூரான் இருந்ததால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.