Movie prime

அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்!! 17 பேர் பரிதாப பலி!! 50 பேர் படுகாயம்!!

 
bomb blast
பாகிஸ்தான் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்தில் எதிர்பாராத நேரத்தில் திடீரென அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வெடித்ததில் 7 காவலர்கள் உள்ளிட்ட 17 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் இந்த தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதல் கிடையாது என்றும், வெளியில் இருந்து எந்தவிதமான தாக்குதலும் நிகழவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட்டின் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் காவல் நிலைய கட்டிடம் சுக்குநூறாய் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
broken building
ஆனால், காவல் நிலையத்தில் வெடி மருந்து இருப்பு அறை இருந்ததாகவும், அங்கு சேமிக்கப்பட்டிருந்த பழைய வெடி பொருட்களே இந்த வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமா என்பது குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக மாகாண காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்பு துறை பணியில் உள்ள அதிகாரிகள் என்று ஹயாத் கூறியுள்ளார். அந்த கட்டிடத்தின் வழியாக சென்ற ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் உயிரிழந்ததாக ஹயாத் கூறியுள்ளார்.
bomb blast
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெடி விபத்துக்கான காரணத்தை அறிய காவல்துறையினர் மற்றும் விசாரணை அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.