இன்று தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
Apr 23, 2023, 09:12 IST

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று தமிழ்நாட்டின் சில இடங்களில் லேசாக மழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியால், இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்ப நிலையாக 38-39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.