தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம்!!
Apr 3, 2023, 10:07 IST

தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு நிலவி வருவதன் காரணமாக தென்னிந்திய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, கடலூர். மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.