Movie prime

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
rain
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
rain
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
rain
முன்னதாக வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை இந்தியாவின் பல மாநிலங்களில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.