தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு நிலவி வருவதன் காரணமாக தென்னிந்திய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்ப நிலையாக 35-36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27-28 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.