Movie prime

உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை!! இன்று சென்னை வருகிறார் பிரதமர்!!

 
pm modi
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி சென்னை வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னையில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமான ஊர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
pm modi
சென்னை நகரம் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிட்டத்தட்ட 22,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும், மேலும் பல நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் இன்று வர உள்ளார்.
vanthe bharath
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு இன்று மதியம் 2.30 மணி அளவில் வர உள்ளார். சென்னை பழைய விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் வரை செல்லவுள்ள வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
pm modi
அதை தொடர்ந்து, இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து பின்னர் நாளை முதுமலை புலிகள் சரணாலயத்தை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை மற்றும் முதுமலை சரணாலயத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.