Movie prime

வயிற்று வலியால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பலோவில் அனுமதி!!

 
M.K.Stalin
சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் வயிற்று வலியின் காரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
stalin
இந்நிலையில், இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்று மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் முதல்வர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
hospital
அமைச்சர் துரைமுருகன், எம்.பி கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியவர்கள் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். வயிற்று வலி காரணமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் கூறியுள்ளனர்.