Movie prime

கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் சீனா!!

 
rain
கடந்த சில நாட்களாக சீனாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதனால் சீனாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளதால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக பருவமழை சற்று அதிகமாக பெய்து வருகிறது.
flood
அதனால் சீனாவில் சாங்ஜி, ஷிமென், யோங்ஷூன் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3000 க்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
flood
மேலும், முக்கியமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மேலும், பலரும் காணவில்லை என்பதால் மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.