10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்!! மார்ச் 27 பதிவிறக்கம் செய்யலாம்!!
Mar 21, 2023, 09:37 IST

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கான நுழைவு சீட்டை வரும் மார்ச் 27 ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வு வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறும். அதை தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

அந்த தேர்வுக்கான நுழைவு சீட்டை வரும் 27 ஆம் தேதி பிற்பகலில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்(user id) மற்றும் ரகசிய எண்(password) ஆகியவற்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.